பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/310

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

298

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


125. அறம் பிற செய்யாமை

 
பூவுலகில் பொய் பிறந்த வரலாறு அறியோம்!
எங்கும் பொய்யின் ஆட்சியே!
ஊனும் உயிரும் உருகும் வாசகம் தந்த
மாணிக்கவாசகனாரும்
"பொய்” என்று சொல்ல அஞ்சி
"பொய்யர்தம் மெய்" என்றே மொழிந்தார்!
ஒரு பொய்யைச் சொல்லுவதற்குப் பதிலாக
முகத்தில் காறி உமிழ்ந்து துப்பலாம்!
பொய், சொல்வோருக்கும் ஆபத்து!
பொய், கேட்டோருக்கும் ஆபத்து!
பொய் சொல்லப் பழகின்
பொய்க்கே கொத்தடிமையாய்
உழைத்திட வேண்டி வரும்!
பொய் நிறையக் கோரிக்கைகளை வைக்கும்!
பொய்யை மறைக்க முயற்சிகள் தேவை!
உண்மைக்கு மறைப்பு வேண்டாம்!
பொய்யை மறைக்க நிறையத் தேவை!
பொய்யின் தேவைகள் வளரும்!
பொய்! - தற்காலிகமான வசதி! அவ்வளவுதான்!
பொய் புகலுவதற்கு நினைவு தேவை!
"பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று" என, மொழிந்த
திருக்குறள் தேர்க! தெளிக!