பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/312

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

300

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


127. முயற்சியே வெற்றி!

இன்று என்னுடைய நாள்!
எனக்குச் சில இலக்குகளை அடைய வேண்டும்!
கோல் போடாத கால்பந்து விளையாட்டுப் போல
நான் என் இலக்குகளை அடைய வில்லை!
இது உண்மை!
ஆயினும், இலக்குகளை இழந்து வாழ்தல் இயலாது!
இது உறுதி!
கோல் போடாத நிலையில் விளையாட்டை இழக்கலாம்!
கோல் போடாது போனாலும்
திறமையாக விளையாடுவதில் விளையும் பயன் உண்டு!
'நன்றாக விளையாடினான் - என்ற புகழ் கிடைக்கும்!
கோல் போடாதது அதிர்ஷ்டத்தின் பாற்பட்டது என்று
ஊரார் கூறுவர்!
அதா அன்று,
என் இலக்குபற்றிய பிடித் தளர்வுகளால்
இலக்கு நழுவி விடுமாயினும்
எனக்கு இழப்பு இல்லை! எப்படி?
நான் செய்த முயற்சியின் பயன் நாளின் மதிப்பைவிடக்
கூடுதலாயிற்று.
நான் அடைந்தவை சிலவே! .
அவற்றையும் கூடி நிற்பவர்கள் கொச்சைப்படுத்துகின்றனர்:
எனக்கும் உண்மையில் மனநிறைவு இல்லை!
ஆயினும், இந்த முயற்சியும் பிரார்த்தனையும் இல்லாமல்
வறிதே வாழ்நாளைக் கடத்தியிருந்தால்
இன்றுள்ள நிலைக்கும் கீழே தள்ளப்பட்டிருப்பேன்!
முயற்சியுடன் கூடிய வாழ்வின் உள்ளடக்கம்