பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/319

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

307



133. பக்திப் புனைவு

மனிதகுலத்தில் மானிட இயல்பை,
நிறைவின்மையை, பூரணத்துவமின்மையைத்
தேடிக் காணல் இயற்கையே!
பக்திப் புனைவு அதிகமாகுபோது
கடந்த காலம் ஐயத்திற்கிடமாகிறது
மக்கள் உலகம் ஐயத்தின் வழியிலேயே முடிவெடுக்கும்!
செய்யத் தகாதன எல்லாம் செய்துவிட்டு
இனிமேல் செய்யக் கூடிய தீமைகள்
யாதொன்றும் இல்லையே என்ற நிலையில்
பக்திப் புனைவும் பாருளோர்க்கு உபதேசமும்
செய்திடலாம்!
அவன் திருந்துவானா?
அவன் திருந்தினால் சரி! திருந்தாது போனாலும் சரி?
அவன் ஒரு பிணம்!
பிணத்தினிடம் குணம் எதிர்பார்க்கலாமா?
உயிர்ப்புள்ள மனிதனே வளர்கிறான்!
நாளும் மாறுவோம்! வளர்வோம்!