பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பாடுதல் வேண்டா, மகாத்து மாவைப்
பாடுக! இவ்வுல கப்புகழ் சேர்ப்பீர்!
பாட்டுக் கொருபுல வன்பா ரதியே!
முகத்தில் முறுக்கு ஏறிய மீசை
முத்தமிழ்க் கும்முடுக் கேற்றும் கவிஞன்!
பாரதி தளர்ந்தவ னுக்கோர் ஊன்றுகோல்!
விசையொடிந் தவனுக் கவன்ஒரு வில்!
நொந்துநைந் தவனுக் கவன்நல் லமுது!
பஞ்சாங் கத்துக் கவன்பகை: புதுயுகப்
பொலிவு! அவன் நாட்டின் புதுமைக் கவிக்குயில்!
இந்த யுகமது காந்தி யுகமாம்
கவிஞன் பாரதி காந்தி யுகக்கவி!
வள்ளுவன் சிந்தனை, காரல் மார்க்ஸ்
மாமுனி சிந்தனை இரண்டும் சேர்ந்த
ஏற்றமார் ஏந்தல்! காந்தி யடிகள்
கவினுறு கருத்தும் சேர்ந்த முழக்கம்;
கவிஞன் பாரதி முழக்கம்! பாரதி
பாட்டினில் பக்தியு முண்டு. எனின்அது
பஞ்சை யாய்ப்பரி தவிக்கும் பக்தி
இல்லை! பரமனைத் திருப்தி பண்னும்
சூதும் இல்லை வேத பண்டிதர்
வித்தகப் புரோகிதர் தமைவாழ் விக்கும்
பக்தியும் இல்லை! பரமன் கற்பனையை,
பரசிவ மதனின் கருணையைப் பாரில்
செழிக்கச் செய்யும் பக்தியே உண்டு!
பாரதி பெண்ணும் ஆனான்! கண்ணனைக்
காதல னாகக் கொண்டான்! ஆணின்
அடிமைப் பெண்ணா யல்ல! அண்டங்களை
அளக்கும் பெண்ணா யானான் அவனே!
பார திக்கு முன்பு, ஆண் களுக்குப்