பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/321

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

309



135. பொய், பொய்யேதான்!

அலங்காரம் செய்யப் பெற்ற பொய் புனைவுகளால்
பொய் பெரிதாகிறது!
தவறுகளுக்கு அணிகலன்கள் பூட்டினால்
தவறுகள், தவறுகள் இல்லையாகி விடுமா?
நிறைகளைவிடத் தடம்மாறிய தவறுகள்
நலம்பல செய்யும் என்று எண்ணுதல் தவறு
பொய்க்குக் கோலம் செய்வதால்
உண்மையாகி விடுமா?
ஒருக்காலும் ஆகாது!
பொய், புனைவுகள் பெற்ற போதும் சரி,
பெறாத போதும் சரி,
பொய், பொய்யேதான்!
பொய்யின் ஆயுளும் அற்பமே!
ஆதலால்,
பொய்க்குப் புனைவுகள் செய்து
வாழ்நாளை வீணாக்குவானேன்?
பொய்யைப் புறத்தே தள்ளுக!
உண்மையே பேசுக!