பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/323

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

311



137. அன்பிற்கு அரண்!


மனித இதயத்தில் இடம்பெற வேண்டுமா?
அதற்குரிய ஒரேவழி வயிறுதான்!
வயிற்றின் வழியே உயர்ந்த வழி!
அதாவது,
வயிற்றுக்குச் சோறிடுவதுதான் அந்த வழி!
இது முக்காலும் உண்மை!
அன்பையே உயிர் மூச்சாகக் கொண்டு
வாழுகின்றோம் என்பதில்
உண்மை இல்லாமலும் போகலாம்!
ஆனால், ஒன்றுமட்டும் உண்மை!
முக்காலும் உண்மை!
எந்த ஒரு பெண்ணும்
பசிக்கும் வயிறுடைய கணவன் இதயத்தில்
இடம்பெற இயலாது!
கணவன் வீட்டை அமைக்கிறான்!
மனைவி அந்த வீட்டைப் பராமரிக்கிறாள்!
கணவன் உணவுக்குரிய பொருள்களைக் கொணர்கிறான்!
மனைவி அவற்றை
உண்டி நாலுவிதமாய் அறுசுவையுடையதாய்ப்
பக்குவமாகச் சமைக்கிறாள்!
இதில் இருவருக்கும் பெருமை உண்டு!
ஒருவரையொருவர் புரிந்து கொள்ளலாம்
இந்த முறையில் ஒருவருக்கொருவர்
மதித்தலும் சார்ந்து வாழ்தலும் நிகழ்கின்றன!
அதனால், நிலையான அன்பு தழைக்கிறது!
மனிதன் அன்பை விரும்புகிறான்! - உண்மை
ஆயினும், மூன்றுவேளை உண்ண உணவு வேண்டுமே!
நீண்டகால அன்பின் செயலாக முத்தமிடுதல் விளங்காது:
ஆனால், சமையல் அந்த இடத்தில் நிற்கும்!
வயிற்றுக்கு இடுதலே அன்பிற்கு அரண்!