இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
318
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
ஓ! மனிதனே!
உன் பெருமையை விழுங்கிவிடு!
பெருமையைப் பாராட்டாதே! பேணி ஏற்காதே!
பலருக்குத் தன் பெருமையை விழுங்க இயல்வதில்லை!
அதுமட்டுமா?
இல்லாத பெருமை இருப்பதாகப் பறை சாற்றுவர்!
ஐயோ, பாவம்! ஆடிக் காற்றில் பறக்கும்
எச்சில் சிலை ஒத்தவர்கள் இவர்கள்
விழுங்க முடியாத பெருமையா, உரியது?
இல்லை! இல்லை! ஒருபோதும் இல்லை!
நீ உன்னையும் உன்னைச் சார்ந்தவர்களையும்
பேணி அணைத்து அழைத்துச்செல்ல விரும்பாததால்
பெருமையை விழுங்க மறுக்கிறாய்!
குழம்பாதே! குழப்பிக் கொள்ளாதே!
உன் பெருமையை விழுங்கிவிடு!