பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/348

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

336

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



160. ஆற்றலைப் பெறு வெற்றி

வந்தடையும்!

எதிர்ப்புகள் கொடூரமாக உள்ளனவா?
அந்த எதிர்ப்புக்களை வெல்ல ஒரே வழி!
உனக்கு நீயே போராடி ஆற்றலைப் பெற்று
வளர்ந்து உயர்க!
எதிர்ப்புக்களையும் கடந்து துள்ளியெழுந்து
உயர்ந்து நிற்கும் ஆற்றலைப் பெற்றுக் கொள்க!
வெற்றியும் தோல்வியும்
உன் தலைமைத் தகுதிக்கு உட்பட்டது தானே!
உன் தகுதி வளர வளர வெற்றி பெறுவாய்!
உன் தகுதி வளராதொழியின் நீ வெற்றிபெற இயலாது!
இந்த உலகமே இடர்ப்பாடு நிறைந்ததுதான்!
மனிதன் கல்வியால் அறியாமையை வெற்றிகண்டு
விளங்கித் தோன்றுகின்றான்!
கடுமைகளைக் கருணையால் வெற்றி கொள்கின்றான்!
சோம்பலிலாத் தொழில் முயற்சியால் வெற்றி காண்கிறான்!
உயர்வு சார்ந்த எண்ணங்களால்
தாழ்வு மனப்பான்மைகளை வெற்றி கொள்கின்றான்!
தீமையை நன்மையால் வென்று விளங்குகின்றான்!
இத்தனை வெற்றிகளும் அவன்
தன்னை வெற்றிபெறுவதில்தான் இருக்கிறது
இதயத்தை உரிமைப்படுத்து! வெற்றி பெறுக!
வெற்றிகள் ஆரவாரத்தில் இல்லை!
வெற்றிகள் மக்கள் கூட்டம் நிறைந்த கடைவீதியிலும்
இல்லை!
வெற்றிகள் அதிகார முடியிலும் இல்லை!
முழக்கங்களிலும் இல்லை!
நீ உன்னை வெற்றிகண்டு விளங்கும் ஆற்றலிலேயே
உள்ளது.
உன்னை அறிக! உன் குறைகளைக் களைக!
எழுந்து நில்! அறிவை விரிவு செய்! அகண்டமாக்கு!
ஆற்றலைப் பெறு! வெற்றி வந்தணையும்!