பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/351

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 நாள்வழிக் கவிதைகள்

339



163. கடிகார முள்

நமது சொற்களைவிட நமது செயல்கள் அதிகம் கூறும்!
நாம் என்ன செய்கிறோமோ அதுவாகவே இருக்கிறோம்!
நம்மைப் பிறர் நினைத்துக் கொள்ளவே
நாம் பேசுகிறோம்!
மனிதனின் வரலாறு அவனுடைய செயல்களின் வரலாறே!
மனிதர்களைப் படைக்கிறார்கள்!
படைத்த மனிதர்களைக் காட்டுகிறார்கள்!
மனிதனின் போக்கில் தவறு காணலாம்!
செயலில் தவறுகாண இயலாது!
சுறுசுறுப்பான நாக்குக் கூடச் சரியாகப் பேசாது!
கடிகாரத்தின் ஒசையை எவரும் பாராட்டமாட்டார்கள்!
கடிகாரத்தின் முட்கள் நகரவேண்டும்
கடிகாரத்தின் முட்களைக் காப்பது முக்கியமல்ல.
கடிகார முட்கள் நகர்வதே முக்கியம்!
உன்பேச்சு போதும்! வாயை மூடு!
ஏதாவது நல்லது ஒன்றைச் செய்!
செயல் மூலம் மூச்சுவிடு! வாழு!