பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/357

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

345



169. இதயக் கதவைத் திற!

இதயக் கதவுகள் உனக்காகத் திறக்கப்பெறும்.
நீ, விலைமதிப்புள்ள மதிப்பீட்டை வழங்கினால்
நீ வழங்கும் மதிப்புடன் கலந்த மரியாதை
பலமுடைய பூட்டிய இதயத்தையும் திறக்கும்!
நேசத்திற்கு நேசம்!
அன்புடன் அணுகு! நீ அன்பைப் பெறுவாய்!
மரியாதையைத் தா!
மரியாதை கலந்த வரவேற்பைப் பெறுக!
ஒரு சிலர் தவறலாம்!
இவர்கள் மனிதக் கணக்கில் வரமாட்டார்கள்!
நீ, எவருடைய இதயத்தையும் நொறுக்காதே!
நீ, இதயக் கதவுகளைத் திறக்கும் முயற்சி செய்!
திறந்த இதயங்களை
அன்பாலும் பரிவாலும் தூய்மை செய்!
இயக்கு! இணைந்து கொள்க!
இச் செயல்முறை மனமுறிவுகளைத் தவிர்க்கும்!
எங்கும் காணப்படும்... வாழ்க்கையை
இது கொஞ்சம் இயக்கும்
கண்ணியத் தன்மை மனித உறவுகளுக்குத் தேவை!
அது, சமயத்தின் ஒரு பகுதியும் கூட!
கண்ணியப் படுத்துதலே சமயம்!
கடவுளின் பொன்னான ஆட்சியின் விளக்கம்
கண்ணியமே!
கண்ணியத்துடன் கலந்த நட்புப் பழக்கங்கள்
மக்களை இயக்கும்; உதவவும் தூண்டும்!
உன் வார்த்தைகளே உன்வாழ்வு!
உன் எதிர்காலம்!

கு.XIV.23