பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/367

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

355


179. எது தகுதி?

“நல்லவன்” என்று நாலுபேர் சொன்னால் போதுமா?
நல்லவனுக்குரிய தகுதி வேண்டும்!
மக்கள் நீ எப்படி இருக்கிறாய்
அல்லது நீ எப்படி இல்லை என்று மதிப்பது போதாது!
உன் ஒழுக்கம் உன் நிலையை உணர்த்த வேண்டும்
பலர், பொதுவாழ்வில் குற்றம் இழைக்காமல் இருக்கலாம்?
ஆனால், தனிப்பட்ட வாழ்க்கையில்
அதே குற்றங்களைச் செய்யலாம்!
அறையில் திருடுவது; அம்பலத்தில் அள்ளிக் கொடுப்பது;
இதை மக்கள் போற்றலாம்!
ஆனால், அறையின் கதவுகளுக்கு உண்மை தெரியுமே!
உன் பெயர் எப்படி இருக்கிறது?
நாடு நினைக்கிற அளவுக்கு இல்லை!
ஆனாலும், பாதிக்குப்பாதி நான் நல்லவனே!
அவன் காணப்படுவதை விட
வாழ்தலுக்கு ஆர்வம் காட்டுகிறான்;
அயலார் புகழைக் கெடுத்துத்
தம்புகழ் தேடுவோர் வெறுக்க வேண்டியவர்கள்!
புகழும் பொருளல்ல!
நல்லவனாக வாழ்தலே புகழ்!