பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியரங்கக் கவிதைகள்

25



வள்ளுவர் உலகம் குற்றம் செய்யத்
துரண்டு பவனை ஒறுத்திடு கின்றது!
"தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்றம் ஆகும்” என்றான் வள்ளுவன்
கள்வனைச் செல்வன்தான் தோற்றுவிக் கின்றான்;
அழுக்கா றதனை ஆடம் பரமே
தோற்றுவிக் கின்றது! சொல்லவும் வேண்டுமோ
உழைப்பவர் உழைப்பின் பயனை உறிஞ்சிக்
கொழுப்பவன் உழைத்தவர்க் கேழைமை சேர்ப்பான்.
மேய்ப்பவர் உழைப்பின் ஏய்ப்பினா லன்றோ
வாய்த்தது ஏழைமை வளமையார் உலகில்!
'நோய்நாடி நோய்முதல் நாடுக' என்றான்
மானுடச் சாதியின் நோய்முதல் நாடின்
தனியுடை மை யெனச் சாற்றவும் வேண்டுமோ?
"ஊக்கம் உடைமையே உடைமை" என்றான்
ஊரிலே மிகுந்த பெரு நிலம் உடைமை
உடைமை யோ அஃதுலுத்த உடைமை
வெகுளா மைதனைப் பேசுவான் வள்ளுவன்
ஆயினும் அவன்சில வமயம் வெகுண்டால்
இறைவனா னாலும் எற்றி விடுவான்!
"இரந்தும் உயிர்தான் வாழ்தல் வேண்டின்
பரந்து கெடுக உலகியற்றி யான்" என்
றிடியென முழங்குவான்; எரியெனச் சுடுவான்!
அவ்விடி தானும் ஆக்கியோர் தமக்கே.
அந்தோ, அவன் தோன் றியநாட் டினிற்கை
யேந்திப் பிச்சை யெடுப்பவர் கூட்டம்
பெருகி வளர்தல் பெரியவே தனையே!
மானுடச் சாதியின் மேடு பள்ளத்தை
நீக்கிட ஒழுக்கம் நிலைத்துயர் சாதி
ஆக்கிட மேதை மார்க்ஸ்மா முனிவன்

கு. ΧΙV. 3.