பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/372

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

360

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


184. நேர்மை

நேர்மை மதிப்பைத் தருகிறது!
பழங்காலத்தில் உழுவலன்பு இருந்தது!
மரணப் படுக்கையில் தம் மக்களுக்கு உயில் எழுதினர்;
அவர்தம் உடைமைகளில் ஒரு காசு கூட
நேர்மை தவறிய வழியில் வந்ததில்லை;
எல்லாமே நீதியொடு பொருந்திய
நேர் வழியில் வந்தவை!
அகத்திலும் புறத்திலும் மதிப்புயர் மனிதன்!
அவன் மகிழ்ந்து வாழ்தலுக்குச்
செல்வத்திலும் அவன் பண்பாடே துணை செய்தது!
சுயமரியாதையையும் மதிப்பையும் விட
எது மகிழ்வைத் தரமுடியும்?
நேர்மையுடன் கூடி வாழ்க!
நேர்மையுடன் நட!
நேர்மையுடன் பணிகளைச் செய்க!
நேர்மையுடன் உண்ணுக!
நேர்மையுடன் கூட்டாளியாகுக!
நேர்மையுடன் வாழ்க!