பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/373

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

361


185. வரவும் செலவும்

வரவைச் செலவு மேவி விடாமல்
காப்பது நலம்!
பொருள், சுதந்திரம் தரும்!
பொருள், வேறு எந்த நன்மையை வழங்காது போனாலும்
உறுதியாகச் சுதந்திரம் தரும்!
சிக்கனம் நாணயத் தயாரிப்புச் சாலை நிகர்த்தது;
அளவிலா ஆக்கம் தரும்!
ஒரு காசு சேமித்தால் ஒருகாசு செய்தது போல!
காசு சம்பாதிக்காமல் செலவழிப்பது கேடு!
செலவழிக்காமல் இருப்பதே கடினம் போலத் தோன்றும்!
நல்வாழ்க்கையின் குறிக்கோள் வரவுக்குள் செலவழிப்பது!
அதனினும் நல்லது சில காசுகள் சேமித்தல்!
இன்று சேமிக்கும் சில காசுகள்
நாளை மழைபோலப் பயன்தரும்.
உண்மை!
உன்னிடம் மறைக்கக் கூடிய பையும் இல்லை!
உடைய காசும் இல்லை!
ஆயினும் சில காசுகள் வந்தன!
அவை உன்னுடையவை அல்ல; பிறருடையவை!
நீ விலைபோக இதுவே வழி!
வாங்கும்முன் பணப்பையைக் காத்துக் கொள்க!
கட்டத் தொடங்குகிறாயா? முடிக்கமுடியுமா? என்று
எண்ணிக் கட்டத் தொடங்கு!

கு.XIV.24