பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/381

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

369


192. சான்றோர் வழி!

நன்னடத்தையும் நல்ல அறிவும் இணைந்தவை!
மரியாதையற்ற நடைமுறைகள்
நினைப்புகளை வெளிப்படுத்தும்
மரியாதை அறிவின் விளைவு!
புத்தியில்லா மனிதன்
தனது காட்டுத் தனத்தை
வாய்ப்புகள் வந்துழியெல்லாம் காட்டுவான்
நல்ல நடத்தைகள் வரவேற்கப் பெறும்
நல்ல நடத்தையுடையவர்களை
மக்கள் தொழுது வரவேற்பர்!
நல்லெண்ணமும் நன்னடத்தையும்
இரட்டைப் பிறவிகள்
இந்த வழியே சான்றோர் வழி!
குரங்குகள் போலத் தாவமாட்டார்கள்!
துள்ளிக் குதிக்கமாட்டார்கள்!
நாய்களைப் போலக் குரைக்கமாட்டார்கள்
மனித உறவுகளை நாகரிகமாகப் பேணு வார்கள்
எப்போதும் எவருடனும் உராயமாட்டார்கள்
நீ ஒன்று செய்!
நீ, நிலை குலைந்து விட்டாயா?
நீ, ஒரு மனிதனாக நடந்து கொள்
இதற்கென்ன விலையா தரவேண்டும்?
இந்தப் பழக்கம் நண்பர்களைக் காத்துத் தரும்!
வேண்டியபோது உணவும் கிடைக்கும்
விலை மதிப்புடைய நாகரிகம் பேணுக!