பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/382

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

370

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


193. மற்றவர் மகிழப் பேசு!

பேச எடுத்த பொருளைக் கடக்க முடியாமல் திணறல்!
ஐயோ, பாவம்!
ஒன்றையே பன்னிப் பன்னிப் பேசி
மற்றவர் காலத்தையும் கெடுப்பது நியாயமா?
சொன்னதையே சொல்லி
கேட்டதையே கேட்க வைத்தால்
வெறுப்படைய மாட்டார்களா?
பொறுமைசாலிக்கும் பொறுமை போய்விடும்
வேறு வழியில்லை!
சொல்வதைச் சுருக்குக!
கதவுகளின் 'கிரீச சப்தத்தைப்போல
உன் பேச்சு ஆகிவிடக் கூடாது
சுருக்குக! சுருக்கமாக உன் பேச்சு இருக்கட்டும்!
சுவையான பேச்சேயானாலும்
நீண்டால் வெறுப்புத் தட்டி விடும்!
போதும்! போதும்! என்று முணுமுணுக்க விடாதே!
மற்றவர்கள் மகிழப் பேசு.