பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/388

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

376

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


199. சின்னத் தொடக்கம்

வென்று விளங்குவன எல்லாம்
சின்னஞ் சிறியனவாகத் தொடங்கப் பெற்றனவேயாம்!
கேழ்வரகின் பரிணாம வளர்ச்சியே ஒக்!
வானவில் எளிய ஒளியின் படைப்பே !
ஒளிரும் ஒளியில் ஒருதுளி தண்ணீரே
வானவில்லின் தோற்றம்!
பல துளிகள் சேர்ந்ததே ஆழ்கடல்!
அரிச்சுவடி படிச்சவனே பின் பட்டதாரியாகிறான்!
ஒரு சிறு எண்ணெய் ஊற்றே
எண்ணெய்த் தொழிலாக வளர்ந்தது!
இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்பனவெல்லாம்
ஆரம்ப காலத்தில் சின்னஞ்சிறிய தொடக்கங்களேயாம்!
ஒர் எளிமையான தொடக்கம் பெரிதும் விளங்கும்!
நாளும் வழிபாடு செய்!
நல்லன எல்லாம் அடைவாய்!