பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/390

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

378

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


201. சுவை தெரிந்து தேர்க!

காதுகள் கேட்க கண்கள் பார்க்க!
வளமான சொத்துக்களை,
பொதுவான அதிசயப் படைப்புக்களை
ஒருவர் கவனத்துடன் பார்க்கவும் தெரிந்து கொள்ளவும்
முடியும்! முடிவுகளும் எடுக்க இயலும்!
வானம் கடவுளின் புகழ்பாடும்!
மரங்கள் பேசும் “எங்கள் பழங்களைக் கொண்டு தேர்க!”
எங்களை என்று!
சுவை தெரிந்து தேர்க!
பொறுமையுடன் படிக்கும் புத்தகங்கள் போதிக்கின்றன!
இயற்கை தனது எல்லைகளை நாடுகின்றது!
கல்லில் பொறிக்கப் பெற்றுள்ள நீதி போதனைகள்
செயலாக்க வேண்டித் தவம் கிடக்கின்றன!
அவன் எதிலும் நல்லதைப்பார்ப்பான்!
விளம்பரத்திலும் கூட அவன் போக்கு தனிப்போக்கு!
மனித நேயப்போக்கு விரும்பி வரவேற்கப் படுகிறது!
தன்னைத் தானே தேர்வு செய்து கொள்ளல்
எந்தச் சூழ்நிலையிலும் சரிக்கட்டிக் கொண்டுபோதல்
எப்பணியையும் தொடங்கும் ஆர்வத்தில் முனைதல்
கடினங்களாயினும் அவன் வழி தவறுதல் இல்லை!
அவனை அவன் முட்டாளாக்கிக் கொள்ளமாட்டான்!