பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/398

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

386

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


209, தீர்ப்பு

தவறான தீர்ப்புகளே வாழ்க்கையைத் தோல்வி முனைக்கு அழைத்துச் செல்லும்! உதைபந்து விளையாட்டாளன் பந்தொடு விபத்துக்களை எதிர்பார்த்து முன்னேறுவான்! அதுபோலத் தான் வாழ்க்கை! ஆயினும், அறியாமை கலந்த தீர்ப்பினையே ஒவ்வொரு தடவையும் எடுக்கிறாய்! பயன்படுத்துகிறாய்! இந்தமுறை மாறாவிடில் ஒருபோதும் இலக்கினை அடையாய் வெற்றியும் இல்லை! தவறுதல் - பொதுவாக மனித இயற்கை! நீயும் தவறுகளைச் செய்வாய் எது எப்படியிருப்பினும் உனது இதயம் உண்மையாகவும் மனிதம் மிக்கதாகவும் இருப்பின் உனது தீர்ப்பு குருட்டுத்தனமானது என்று உணர்த்தும் ஆனால், ஒரே ஒரு பிழை அதுதான் தீர்ப்பு தவறானது என்பது உனது தவறான தீர்ப்புக்கு அடிப்படை இல்லை. சகிப்புத் தன்மையை விடத் தீர்ப்பு மேலோங்கி நிற்கிறது! உனது ஒவ்வொரு தவறான தீர்ப்பும் தவறான முடிவுகளையே தருகின்றன! நாம் உண்மையை விரும்புகின்றோம்! யார் அழைத்துச் செல்வது? குருட்டுத் தனத்தை மன்னிக்கலாம்!

ஆனால், அடிப்படை இல்லாததை என்ன செய்வது?