பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


        பீடுசால் தலைமை பெருமைசேர் தலைமை.
        மறத்தையும் மாறா அன்பினால் மாற்றும்
        திருத்தகு தலைமை சிறந்தநற் றலைமை
        வள்ளுவன் தலைமையை வையத்துக் குணர்த்த
        இந்தநூற் றாண்டில் வந்தனர் 'அண்ணா'
        கண்ணிற் கணிகலம் கண்ணோட் டந்தான்
        என்பதன் விளக்கம் இவனிடம் கண்டோம்.
        வள்ளுவன் தலைமை வாழ்விக்கும் தலைமையே!


2. கவிஞர் பூங்குன்றன்


அறிமுகம்:

        சங்கம் தழுவிய சான்றோ ருடனே
        கணியன்பூங் குன்றன் அணியென இருந்தார்
        விந்தை மிகுவிஞ் ஞானம் உலகை
        இணைக்கும் முன்பே யாதும் ஊரே'
        "யாவரும் கேளிர்” என்னப் பேசினார்.
        ஆசினை நீக்கு பவன்ஆ சிரியன்
        கணியன்பூங் குன்றன் தனிஆ சிரியன்
        உட்பகை களைந்தே உறவினை வளர்த்தான்;
        ஊர்களை இணைத்தான் உளங்களை இணைத்தான்.
        அந்தப் புகழ்மிகு பூங்குன் றன்தன்
        நினைவு நிலைத்திட வந்துதித் தாரோ,
        இப்பூங் குன்றன் என்னும் கவிஞர்?
        வள்ளுவன் எமதா சிரியன் என்றே.
        வழிமுறை காட்டி வள்ளுவன் பள்ளியில்
        பயில நமையெலாம் அழைப்பார் இவரே!