பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/402

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

390

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


212. குறிக்கோள் வாழ்வு

மண்ணில் நடந்திடும் வாழ்க்கை மகிழ்ச்சியானது!
                                                  எப்போது?
உயரிய குறிக்கோளுக்காகவோ, பிறருக்காகவோ
உன்னையே அர்ப்பணித்துக் கொள்ளும்போது!
பிறருக்கென முயலும் நோன்பினைத் தொடர்ந்திடும்
போது!
அவன் மகிழ்வுறுகிறான்; அமைதி பெறுகிறான்;
மனநிறைவும் காண்கிறான்.
இத்தகு வாழ்வு, அவனுக்கு வாழ்க்கையில் பிடிப்பைத்
தருகிறது!
முனைப்புடன் வாழத் தலைப்படுகிறான்!
இவன் வாழ்க்கையில் மந்தம் இல்லை! துரக்கமும் இல்லை!
துக்கமும் இல்லை!
மிருகங்களுக்கு அன்றாட வாழ்வே காரியம்!
மாந்தரில் உயர்ந்தவனுக்கோ, வாழ்தலிலும் உயர்ந்தவை
உண்டு!
உறுதிமிக்கவையும் முதன்மையானவையும் உண்டு!
சிலர், மதிப்புயர் பண்பு நலன்களைத் தேர்வர்!
சிலர் சமய நெறி சார்வர்!
மற்றும் சிலர், பிறருக்கு அன்பு காட்டுவர்!
நாட்டுநலம் பேணுவர் சிலர்!
சிலர், புகழ்வேட்டு நிற்பர்!
குறிக்கோளுடைய மனிதர்
அக்குறிக்கோளினை அடையச் சாவையும் ஏற்பர்!
அவர்கள் வாழ்தலுக்கும், சாவாமல் வாழ்தலுக்குமிடையே
உடன்பாடு காணார்!
குறிக்கோளுடைய வாழ்வே, வாழ்வு!
அழகை அடகு வைத்து
அரை வயிற்றுக் கஞ்சியா குடிக்க வேண்டும்?