பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/407

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

395


217. இனி என்னென்ன மாறுமோ?

"பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால்
பொய்யும் மெய்யாமே!"
என்றதன் பொருள் விளங்க
மேகக் கூட்டம் பெருகி வளர்கிறது!
நல்லதன் நன்மையும் தீயதன் தீமையும்
உள என்பார்க்கு இன்னாகவிர்!
இன்று, பகுத்தறிவு என்பது
குற்றந்தேடித் தொகுத்தலேயாயிற்று!
'சமூக நீதி' என்பது சாதிமுறை நீதியாயிற்று!
தமிழ் உணர்ச்சி என்பது - பேச்சாயிற்று!
அறிவு என்பது பட்டங்களாயிற்று!
சுயநலமே பொது நலமாயிற்று!
ஆட்சிக் கட்டில் வாணிகமாயிற்று!
பாராளுமன்றம் சந்தைக் கூடமாயிற்று!
இனி என்னென்ன மாறுமோ?
கடவுளே! என் நாட்டை
நன்னெறியில் செலுத்து!