பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

தவத்திரு குன்றக்குடி அடிகளார்




        கே.சி.எஸ். அருணா சலம் எனும் கவிஞர்
        கேளிர்க்குக் கேளிர் பகைவர்க்குப் பகைவர்.
        மாந்தர் உலகினில் அன்று. நல்ல
        கருத்துல கினில்விளை யாடும் மன்னர்!
        தோழனே, என்றொரு சொல்தொல் லுலகில்
        சிறந்தது உண்டு! சிவபெரு மானே
        தொன்மையில் வாழ்ந்த மனிதனைத் தோழமை
        யாகக் கொண்டனன். ஆயினும் பழங்கதை!
        இன்றோ கடவுள் எங்கும் தோழனாய்
        இல்லை! மாறாத் தொல்லை தருகிறான்.
        நேரடி யாக அன்று, அன்று!
        தொல்லை யிரும்பிறவி சூழும் தளையை
        நீக்கும் நம்சிவன் துயர்தரு வானோ?
        என்று கேட்காதீர்! அவன் துயர் தந்ததை
        யாமறிந் தோமிலை. ஆனால் அவன்றன்
        பெயரில் உலாவும் படைபரி வாரம்
        விளைத்திடும்தொல்லை தாங்குதற் கில்லை!
        எல்லைக ளற்றஎம் சிவன்பெயர் கூறி
        அடிக்கொரு சாதி அமைத்தனர் அந்தோ!
        எந்தை இறைவனைக் காணவும் காசு
        கேட்கிறார் குருக்களும் கேட்கிறார் தட்சணை!
        மடாதி பதிக்கோ பாதகா ணிக்கை!
        இவைபோ தாவென ஏராள மான
        காணி பூமிகள்! இந்தக் கொடுமையால்
        "கடவுள் தோழன்" என்றசொல் பொய்த்துப்
        போனது! தோழமை என்ற சொல்வில்
        புதிய தெம்பினை ஊட்டினான் வியன்மிகு
        ஞாலத் துதித்த லெனின் என் பானே!
        நெஞ்சொடு நெஞ்சும் தோளொடு தோளும்
        தோய்ந்த தோழமை வாய்ந்திடச் செய்து