பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/433

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2

ய்யாக்கண்ணு ஒரு அரசு அலுவர்; உயர் அலுவலர். அரசு அலுவலர் என்ற எண்ணத்தில் முனைப்புடையவர்; அதிகாரப் பசியுடையவர். மக்களைவிட ரசு அதிகாரம் பெரிது என்று கருதியவர்; சமூக உணர்ச்சி இல்லாதவர்; மக்களாட்சியில் அரசு அலுவலர்கள் மக்களின் சேவகர்கள் என்ற கொள்கையினைக் கருதிப் பார்க்காதவர்.

மயில்வாகனம் ஒரு சாதாரண மனிதர்; ஒரு தொண்டர்; சமுதாயச் சிந்தனையுடையவர். மயில்வாகனம் வாழ்க்கைப் போக்கில் அரசின் அதிகாரங்கள்கூட அவர் வசத்திற்கு வந்தன. வராது போனாலும் மயில்வாகனம் எப்படியும் எடுத்துக் கொண்டு விடுவார்.

இது அய்யாக்கண்ணுக்குப் பிடிக்கவில்லை. கடிதங்கள் மூலம் அதிகார வரம்புகள் பரிமாறிக் கொள்ளப் பெற்றன. ஆயினும் அய்யாக்கண்ணுவிடம் மனமாற்றம் இல்லை. மயில்வாகனம் மக்களின் தேவையை உணர்ந்தார். தக்கவாறு அய்யாக்கண்ணுவிற்கும் மேலாய அரசு அலுவலர்களை அணுகினார். தமது கருத்தை எடுத்துரைத்தார். உயர் அரசு அலுவலர்கள் மயில்வாகனம் கருத்தை ஏற்றுக் கொண்டனர். உடன் அரசு அலுவலர்கள் - மக்கள் கூட்டுக் கூட்டம் கூட்டப் பெற்றது. அதில் அய்யாக்கண்ணு மயில்வாகனத்தைப் பாராட்டினார். இங்கு மக்கள் செயற்பட முடியும் என்றார். எளிதாக மயில்வாகனம் வென்றார்; மக்கள் வென்றனர்.


அரசு அதிகாரம் நிலையானதல்ல
மக்களின் அதிகாரம் நிலையானது.