பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/436

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

424

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



5

ருமாத்தூர் கண்ணாயிரம் பிள்ளை ஒரு நிலக்கிழார் நன்செய், புன்செய் நிலங்கள் நிறைய உடையவர். ஏழைகளுக்கு வயிறார உணவு கொடுப்பார். தீபாவளி, பொங்கலுக்குச் சேலை, வேட்டிகள் இனாமாக வழங்குவார்; திருவிழாக்கள் கொண்டாடுவார்; கேளிக்கைகள் ஏற்பாடு செய்வார். ஏழைமக்கள் இவருடைய தாராளத்தில் வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்களும் ஏதோ ஒருவகையில் திருப்தி அடைந்து வாழ்ந்து வந்தனர். ஆனாலும் ஒரு குழிநிலம் கூட அவர்கள் உழுவதற்கு விட்டுக் கொடுத்தார் இல்லை! குடியிருக்க சொந்தத்தில் மனை கொடுக்கக் கூட அவர் முன் வரவில்லை! அது மட்டுமா? அந்த ஏழைகளின் பிள்ளைகள் யாரும் பள்ளிக் கூடத்திற்குப் போவதும் இல்லை! போக ஆசைப்பட்டாலும் கண்ணாயிரம் அனுமதிக்க மாட்டார்!

"ஏம்பா நம்ப பிள்ளைக்கு என்னடா படிப்பு வேண்டியிருக்கு நாலு மாடு ஆடு மேய்ச்சா பத்துக் காசு கையில் கிடைக்கும்" என்று இதோபதேசம் செய்வார். அவர்களும் உபதேசத்திற்குக் கட்டுப்பட்டும், காசுக்கு ஆசைப்பட்டும் கோவணம். கட்டத் தெரிந்த பிள்ளைகளைக் கூட ஆடு மாடு மேய்க்கவே பழக்கினார். சாவு, வாழ்வுக்குத் தாராளமாகப் பணம் கொடுப்பார்! இனாம் அல்ல - கடன்! புரோ நோட்டுகள்! கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்க மாட்டார் கொண்டுவந்து கொடுத்தாலும் "இப்ப என்னடா அவசரம்! எங்கு போகிறது!" என்பார்!

இந்தக் கிராமத்தில் ஒரு புது மனிதர் வந்தார்! குடியேறினார்! அறிவும் தெளிவும் ஏழைகளுக்கு உண்டாக்க முயன்றார்! கண்ணாயிரம் பிள்ளைக்குக் கடுங்கோபம்! சுய சொரூபத்தைக் காட்டினார்! மக்களும் புரிந்து கொண்டனர்!

வானோக்கிப் பயிர் வாழலாம்!
வள்ளலை நோக்கி வாழ்தல் ஆகாது!