பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/438

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

426

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



மாமியார் முழு அதிகாரம்! அவசரகால அதிகாரத்தைப் பெற்றவள் போல நடக்கிறாள்! கணவனுக்குச் சோறு போட மனைவிக்கு உரிமை இல்லை! கணவனும் மனைவியும் கூடி மகிழ தாயின் அனுமதி தேவை! இந்த நிலையில் ஒருநாள் எதிர்பாராத சூழ்நிலையில் திருமகளுக்கு அறிவு பிறந்தது! தெளிவு வந்தது! ஆற்றல் பெற்றாள்! திறமையும் வந்தது!

ஒருநாள் இரவு கணவன் படுத்த பிறகு இரவில் மாமியாரைப் போய் அழைத்தாள்! மாமியும் வந்தாள்! கணவன் படுக்கைக்குப் பக்கத்தில் நிற்க வைத்து மாமியைப் பார்த்து இவருக்குத் தாயாக இருந்தீர்கள், மனைவியாகவும் நீங்களே இருங்கள் என்று சொல்லிவிட்டுக் கதவைச் சாத்திக்கொண்டு வெளியே வந்து விட்டாள்! மகனும் தாயும் திருதிருவென்று விழித்தார்கள்!

பொறுத்திருப்பவர் - புலியும் ஆவர்
பொங்கி யெழுபவர் பூனையும் ஆவர்.

தாயே யானாலும் எல்லையுண்டு!
தாய் மனைவியாதல் இல்லை!

7

திருச்சிற்றம்பலம் என்ற சிற்றுாரில் திருவள்ளுவர் தாசன் வாழ்ந்து வருகிறார். 1330 குறளும்.இவருக்குப் பாடம். திருக்குறள் பதின்கவனகக் கலை செய்வார். திருக்குறளைப் பற்றிப் பேசுவதிலேயே இவருடைய வாழ்க்கை நடந்தது. திருக்குறளைப் பற்றி மண்ணிக்கணக்காகப் பேசுவார். நகைச்சுவை ததும்பப் பேசுவார்.

இவர் ஒரு நாள் மயிலாடுதுறைக்குப் பேச்சுக்காக வந்தார். அங்கு ஒரு கடையில் தின்பண்டம் வாங்கினார்.