பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/440

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

428

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



8

த்தமன் மிகவும் நல்லவர். உத்தமனின் மனைவி பாஞ்சாலியும் நல்லவள். உத்தமனை விடத் திறமைசாலி, நல்ல நிர்வாகி, ஆனாலும் இவ்விருவரும் வாழ்க்கையில் இளமையின் காரணமாக மிகமிக எளியராக வாழ்ந்தார்கள். அது காதல் மீதூர்ந்த வாழ்க்கையாக அமையாது, கழிகாமம் மிகுந்த வாழ்க்கையாக உருப்பெற்றுவிட்டது. கழி பெருங்காமத்தின் பரிவாரங்களாகிய தீய வழியில் பொருளிட்டல் முதலியனவும் வாழ்க்கையில் வந்தமைந்தன.

பாஞ்சாலி திருந்தியபாடில்லை. உத்தமன் அப்பாவி, ஆனாலும் பலசாலி. பல இழப்புக்கள், தீமைகள் வந்தாலும் எப்படியோ சமாளித்துக் கொண்டே வந்தான். அவளிடம் பணப்பஞ்சம் வந்ததில்லை. இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான்! வளர்ந்தான்! பாஞ்சாலி ஒரே பிள்ளை என்பதால் அதிகமாகக் கண்டிக்கவில்லை. திருமண வயது வந்தது. திருமணமும் செய்தாயிற்று! வாய்த்த மனைவி மங்கம்மாளோ அடங்காப்பிடாரி, ஆசைகளே ஒருருவம் கொண்டவள்! இரண்டு பேருமாக பாஞ்சாலியை நெருக்கித் துன்புறுத்தி ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் கறந்து விட்டார்கள். திருமணத்தின் போது கொடுத்த நகைகள் வேறு இருந்தன. எல்லாவற்றையும் அழித்தார்கள்.

மீண்டும் பணத்திற்குப் பாஞ்சாலியிடம் வந்தார்கள். பணம் கேட்டுத் துன்பம் செய்தார்கள்! அடாவடித்தனம் செய்தார்கள்! இப்பொழுதுதான் பாஞ்சாலி உணர்ந்தாள்! வாழ்வதெல்லாம் காதல் வாழ்க்கையல்ல! பிறப்புதெல்லாம் மகவு அல்ல! மகவுருவத்தில் இயமன் கூட வருகின்றான் என்று உணர்ந்தாள்! நோக்கமே விதை! செயலே செடி! பயனே செடியின் மகசூல்! விதை ஆசைகளாக இருந்தால் ஆசைதான் முளைக்கும் செயல் தீவினையாக இருப்பின்