பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/441

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிறுகதைகள்

429


விளைவதும் தீவினையே! பயனும் துன்பமே! ஆசைகளை வெல்க!

விதை ஒன்று போடச்
சுரை யொன்று முளைக்குமா?
9

பாலையூர், ஒரு சிற்றுார்! தாழ்த்தப்பட்ட ஆதி திராவிடர்கள் மட்டுமே வாழும் ஊர்! குடியிருப்பு இடம் நெருக்கடிக்கு ஆளாகியிருந்தது! ஊருக்கு ஒருபுறம் தண்ணிர் வரும் கால்வாய்! இந்தக் கால்வாய் மட்டுமே குடியிருப்புக்கு வரும் பாதை! மற்ற இருபுறமும் வல்லாங்கு வாழ்வோர்க் குரிய உடைமையான புஞ்சை நிலம். குடியிருப்பிலுள்ளோர் அடியெடுத்து வைக்க இயலாது. பள்ளமான பகுதியில் குடியிருப்பு இருப்பதால் நீர்ப்பிடி நீரூற்று! இவ்வளவுக்கும் இடையில் ஒரு வீட்டில் பல குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் வாழ்க்கை ஒரு நரகம்!

இந்த இடத்திலிருந்து அவர்தம் குடியிருப்பை மாற்ற தொண்டர் மயில்வாகனம் முயற்சி செய்தார். சென்று பார்த்தார். அந்தப் பகுதியிலேயே வேறு இடம் இல்லை. பொதுச்சாலை ஒரத்தில் தரிசாகக் கிடந்த ஒரு பகுதி தேர்ந்தெடுக்கப் பெற்றது. இந்த இடம் பார்வையிட்டுத் தேர்ந் தெடுக்கப் பெற்றபோது இடம் தரிசு! வேலி இல்லை! செடி இல்லை! புல் இல்லை! சுற்றிலுமுள்ள இடங்கள் கூட மண்ணரிப்பு நோயினால் தொழு நோய் பிடித்த மனிதன் போலக் காட்சியளித்தது! நில அரிப்பைத் தடுத்துக் காப்பாற்றும் முயற்சியில் கூட யாரும் ஈடுபடவில்லை! புலம் ஆய்வு முடிந்து தெரிவு செய்த பிறகு வட்டாட்சியர் அலு வலகத்துக்கு விண்ணப்பிக்கப் பெற்றது. வட்டாட்சியர் விடை அதிர்ச்சியளித்தது! அதாவது அந்தப் பகுதியைச் சேர்ந்த