பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியரங்கக் கவிதைகள்

33


        மூவா மருந்தாய் முழுதுற நின்றான்
        கண்படு சோம்பல் கவலையில் வீழ்ச்சி
        உற்றபோ தெல்லாம் உறுதுணை யாகி
        நிற்றநற் சேவகன் எத்தனை பணிகள்
        நந்தமக் காற்றி நலிந்தனன். ஆனால்
        புகழ்மிகக் கொண்டான். பொருளெதும் கேட்டே
        தொல்லைப் படுத்தினன் அல்லன் அவனை
        நல்லதோர் பாட்டால் நாட்டினர் கவிஞர்
        குடியர சே, அவர் கொற்றம்வாழ்ந் திடுக!


6. கவிஞர் புலமைப்பித்தன்

அறிமுகம்:

        பித்தன் எனும்பெயர் பிறவா யாக்கைப்
        பெரியோ னுக்கும் உண்டுல கிற்குப்
        பித்தன் ஒருவனே யுண்டு.அவன் சிவனே!
        பித்தன் எனிலோ தன்னல நாட்டம்
        இன்றியே உலகம் பிழைத்து வாழ்ந்திட
        உழைப்பவன் என்பதே உறுபொருள்! இன்றோ,
        பெட்புறப் பிறர் நலம் எதுவும் பேணாது
        தன்னலம் பேணித் தருக்கி வீழ்ந்து
        மூளை பிறழ்ந்து நோய்ப்பட் டோரை
        பித்த னென்று பேசு கின்றனர்.
        இதுபெரும் பிழை! இதோ வருகிறார் புலமைப்
        பித்தன் இவரின் புலமையொன் னினுக்கும்
        பொருளி னுக்கும் அன்றே! அறிவுப்
        புலமைக் கேயாம். ஆதலின் இவரும்
        புலமைப் பித்த ரானார். புலமைப்
        பித்தனால் வான்புகழ் வள்ளுவன் தன்னை
        அணுகா தந்தோ காதலி யென்றே