பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/454

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

442

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



"..ம் .ம். இதெல்லாம் ஆகாதுடா! ஏரியிலேயிருந்து தண்ணிர் நிறைந்தால்தான் வீட்டில் நிறைந்த செல்வம்!"

"தாயே! அம்மா! ஏரியில் உள்ள அச்சுக்கட்டு எல்லாம் எடுத்துடறோம். ஒன்றுகூடி வாய்க்கால் வெட்டி வைக்கிறோம்! ஆத்தா, தாயே! மகமாயி! மழைபெய்யச் சொல்லு! காப்பாற்று!”

"..ம்..ம். மழை பெய்தால் எனக்கு என்னடா செய்வீங்க!”

"ஊரெல்லாம் மரம் வளர்த்து நிரந்தரமாய்க் குடியிருக்கச் செய்வோம்! பாற் சோறு பொங்கல்.”

".ம்..ம். போங்கடா போங்க! மழை பெய்யும்!"

எல்லாரும் வணங்கி விடை பெறுகிறார்கள்! வீட்டிற்கு வந்து சேர்வதற்குள். மழை பொழிகிறது ஒரே மகிழ்ச்சி!

"நீரின்றமையாது உலகம்"
16

ங்கர சாது மிகவும் நல்லது. நல்ல துறவி. முழங்கால் வேட்டி உடுத்திய துறவி, எப்போதும் தூய்மையாக இருப்பார்! நாளுக்கு மூன்று குளியல், திருநீறு நிறைந்த நெற்றி, அக்குமணி அணிந்த கழுத்து. சிவசிவ சொல்லும் வாய்! இப்படியாக அவர் வாழ்ந்து வந்தார். நான்கு கோயிலில் பூசை செய்து வந்தார். அது வாழ்க்கைக்கு முதல்! விநாயகர் நிவேதனம்தான் சிலருக்குப் பயன்படும், அதையே உண்பார். வேறு தனியே சமைக்கமாட்டார்!

ஊரில் உள்ளவர்கள் அன்னதானத்தில் நம்பிக்கை உள்ளவர்கள். போகப் போகும் இடத்திற்கு வழி தேடுபவர்கள்! அவ்வப்பொழுது இவரை அழைத்துச் சாப்பாடு போடுவார்கள்! அப்போது இவர் காண்பதுதான் கூட்டு, கறி எல்லாம்: சங்கர்சாதுவுக்கும் வயது குறைவுதான்!