பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/468

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

456

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


முதலியாரிடம் வேலைக்குச் சேர்ந்துவிட்டேன்! இவையெல்லாம் அவர் கொடுத்ததுதான்! அப்பா தயவுசெய்து இனி நீங்கள் வேலைக்குப் போகவேண்டாம். நாளை முதல் வேலைக்குப் போகிறேன். சம்பாதிக்கிறேன்! குடும்பத்தைக் காப்பாற்றுகிறேன்!”

அப்போது கடைசிக் குட்டி காமாட்சி ஓடிவந்து "நம்ம மயிலைக் கிடேரி கன்று போட்டிருக்கு. அதுவும் கிடேரிக் கன்றாகப் போட்டிருக்கிறது” என்றாள்.

இராமுவுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. ஒடிப்போய் மயிலைக் கிடேரியின் தலையைக் கட்டி அணைத்து முத்த மிட்டான்; பசும்புல் கொடுத்தான்! கலி தீர்ந்துவிட்டது! இந்த ஆண்டு இராமு வீட்டில் மங்களகரமான பொங்கல்!

நாடெல்லாம் மாறுக! பொங்குக பொங்கல்! பொங்கலோ பொங்கல்!