பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

        ஏன்?"என வினவினோம். வான்புகழ் வள்ளுவன்
        ஆற்றா மையுடன் "அருந்தமிழ் மகனே,
        'யாதும் ஊரே,யாவரும் கேளிர்"
        என்றுரை செய்த இனியஎம் ஆசான்
        மொழியையே யாமும் வழிமொழிந் துள்ளோம்.
        "பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும்”
என் றோதினோம்.
        நிலவினைத் தொடும் நீள் மாளிகை யாயினும்
        மண்திணி குடிசை யதனில் ஆயினும்
        பிறந்த மக்கள் அனைவரும் தமது
        பேரினைக் கொண்டு வந்தது மில்லை
        பிறப்பில் சாதிகள் தாங்கி வரவிலை.
        'பட்டா வுடனோ பாங்குக் கணக்கொடோ
        பிறந்தது மில்லை செயற்கையிற் பிறந்தவே
        தானுறு துன்பம் தாங்கலாம் ஆனால்
        சுற்றிச் சூழ்ந்து கிடக்கும்சுற் றத்தைச்
        சுடும்துன் பத்தைத் தாங்கக் கூடுமோ?
        'துன்பம் துடைத்து ஊன்றுதுர ணாக
        இலங்கிட லன்றோ இணையிலா வாழ்க்கை!
        என்றும் குறளில் எடுத்தினி துரைத்தோம்
        நிச்சலும் கொல்லும் நிரப்பின்ரில் மானுடம்
        கிடந்தினைத் தழியும் கேட்டினைக் கண்டே
        "இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
        கெடுக உலகியற்றி யா னெனக் கும்பி
        கொதிக்கக் குமுறிக் கூறினோம்! மண்ணில்
        நிகழ்ந்தது என்ன? மாற்றம் நிகழ்ந்ததா?
        ஈரா யிரம்ஆண் டுகளின் பின்னர்
        எனக்கீ ராயிரம் ஆண்டு விழா, ஏன்?
        நாளும் நாளும் நாயினும் நலிந்திடும்