பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 கவியரங்கக் கவிதைகள்

41


குனிந்து கிடக்கும் மனிதனைக் கோபுரம்
ஆக்கிடப் பாடுக; அழகுறப் பாடுக!
காரி யங்களைப் பாடிட வேண்டா
கார ணங்களைக் காட்டிப் பாடுக!
நோய்விரித் துறையேல்! நோய்க்குறு மருந்தினை
இதுவெனக் காட்டி எழிலுறப் பாடுக!
வறட்சியால் வாடிக் கருகிய மனங்கள்
கவிதை மழையால் களிப்புற் றோங்கவே
பாடுக புலவீர், நீடுக உலகே!

கவிஞர்கள் அறிமுகமும் முடிப்பும்

1. கவிஞர் சொ. சொ. மீ. சுந்தரம்

அறிமுகம்:

வள்ளுவன் கண்ட மாண்புறு கடவுள்
பேரும் ஊரும் கடந்து பிறங்கிடும்
எனினும் அதற்கென இயல்வடி வுண்டு.
அவரவர் முடிபாய் அமைவதவ் வடிவம்!
வள்ளுவன் கண்ட கடவுள் வகைவகை
அப்பமோ டவல்பொரி ஆர்ந்தது மில்லை.
எழுத்துகட் கெல்லாம் அகரமே முதலாம்.
ஆருயிர்க் கெல்லாம் அவனே முதலாம்
முதலென மொழிவது ‘முதலே’ யன்று
வாழ்க்கையின் முதலென் பதுவே பொருளாம்!
அவன்தன் கருணையை அகர வடிவில்
அமைவுறக் காட்டும் அழகுதான் என்னே!
அகர எழுத்தினை ஆர்ந்தினி தோர்க!
மேலே முழுமை மேவிய வட்டமாய்த்
தொடங்கி வளைந்துபின் கீழே யிறங்கிச்
சென்று நின்றுபின் வளைந்து சிறிது

கு.XIV.4.