பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 கவியரங்கக் கவிதைகள்

45


வள்ளுவன் வகுக்கும் தலைமகள் சாயலை
நல்லதோர் கற்பின் நலத்தினைப் பீடு
நடையினைக் கணவர்க் களித்திடும் நங்கையை
மங்கல மாகிய மனையின் மாட்சியை
வளத்தினைப் போற்றி காத்திடும் பெட்டியை
அயர்வினை யகற்றும் அருமருந் ததனை
சோர்வினை நீக்கும் சுடரொளிப் பொற்பை
இன்பம் தரும்இணர் எழில்பூங் கொடியை
வையகம் செழிக்க வந்தமா மழையை
எழில்தலை மகளை இணையிலாப் பெருமையை
சிரித்த முகத்தினர்; செந்தமிழ் நாவினர்;
தறுகண் ஆண்மைத் தகைநலத் தலைவன்
கண்டு காமுறும் பெண்மை நலத்தினர்
நெடுங்களம் நின்ற தடாதகைப் பிராட்டியைச்
சொக்க வைத்துத் தூமணம் கொண்ட
சோமசுந் தரப்பேர் பெற்றஇச் சுந்தரம்
சொற்றமிழ்ப் பாட்டால் காட்டியே நெஞ்சம்
கொள்ள வருகிறார்: கொழிதமிழ் எழுத்தே!
அள்ளிப் பருகுவம் அவர்தமிழ் அமுதே!

முடிப்பு:

பேருல கந்தனில் பிறந்த வள்ளுவன்
வாசுகித் தலைவி மாசில்நங் கையுடன்
வாழ்ந்து கண்ட நல்லின் பங்களைத்
தலைமகள் தன்மையாய்த் தரணிக்குத் தந்தனன்
எல்லோரும் வள்ளுவ ராகிட இயலுமோ?
வாய்த்தவ ரெல்லாம் வாசுகி யாவரோ?
ஏங்கி இளைத்திட லால்பய னில்லை!
எய்திய மனைவியை இவள்தான் தலைமகள்