பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியரங்கக் கவிதைகள்

55


ஏனோ அறியோம்? இரக்கம் கொண்டு
தோழனாய் வந்தால் தோழமை யன்று
உழுவ லன்பும் உரிமை யுணர்வும்
நட்பின் விளைநிலம்; நடைபெறும் களமாம்!
நாடித் தேடுவ தன்றுநற் றோழமை,
நட்டுப் பெறுவதே யாகும் நட்பெனத்
தேறித் தெளிந்து தோழமை கொண்மின்!

8. கவிஞர் மரியதாஸ்


அறிமுகம்:

ஓங்கி உயர்ந்த மாளிகை யாயினும்
ஆங்கோர் ஒதுக்குப் புறத்தினில் குப்பைக்
குழியும் உண்டு; அது போலுயர் பேரற
நூலையே செய்த வள்ளுவன் வைத்துழி
எல்லாம் மனிதனை ஏற்றம் ஆக்கிடத்
துறைதொறும் துறைதொறும் தூய்மையேசெய்து
தேரா மாக்களை நேருறத் தெரிந்து
கயமை என்றே கடைசியில் இட்டான்!
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்க
என்ற வள்ளுவன் இந்தக் கயவனைக்
கொன்றிடு என்றான்! குவலயந் தனிலே.
வாழ்ந்திடும் மக்களில் இனந்தெரிந் துணரல்
எளிதோ? வஞ்சனை விஞ்சிய திந்த
வியனுல கன்றோ? விந்தை மிகுந்த
கோலம் காட்டிக் கொன்றிடும் நலத்தை
மக்களே போல்வர் கயவர் என்றே
வேதனை வெடித்த உள்ளத் துடனே
பேசிடும் வள்ளுவப் பேரா சான்தனை
எவரென வியப்போம்! இமைத்திடாத் தேவ