பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/70

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மூலன் சொன்ன முதுமொழி நோக்கின்
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
என்றே இயம்பிடும்! நன்றே அம்மொழி
தமிழர் மறந்தனர்! உமிழ்நீர் நாவுடன்
பேழை வயிற்றினை வளர்த்திட வந்தோர்
ஒருபிறப் பாகி உறவு கலந்து
வாழப் பிறந்த மனிதரைப் பிரித்தனர்
மனிதனை மனிதன் மோதிட வைக்கும்
மூடச் சாதிப் பகைமையை மூட்டி
விட்டனர்! தமிழச் சாதியும் வீழ்ந்தது!
கூடித் தொழில்செய் தின்புறு மானுடச்
சாதியில் சாதிச் சழக்குகள் தோன்றின:
குன்றிய தந்தோ, குன்றின் அனைய
புகழினம், தமிழினம் பொய்ந்நெறி யாலே!
“அறிவால் எதையும் ஆராய்ந்து பார்”என
மேலும் மூல முனிவன் விளம்பினன்.
ஆயினும் வாழும் அரியபே ரினத்தை
வகைபடச் சூழ்ந்தே அடக்கிட வல்ல
சூதினைக் கொண்டார்! தொல்லறம் மாய்ந்தது.
“இவன்தலை யில்அவன் எழுதினான்” என்றே
இயம்பினர். இந்நெறி பொய்ந்நெறி, பொய்ந்நெறி
“தீதும் நன்றும் பிறர்தர வாரா”
“அவரவர் வினைவழி அவரவர் வந்தனர்”
என்பதிந் நாட்டில் எழுந்த பழைய
நெறியே ஆயினும் இடையினில் வந்த
ஏமாற்று நெறியே நெறியது வாகி
ஏழைகள் ஏங்கித் தவித்திடச் செய்தது!
வளம்பல படைத்தோர் மக்களை வாட்டிட
அவலம் பெருகிய தாழ்கடல் போல
அருந்துயர் பெருகி அழித்தது! இந்தப்