பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியரங்கக் கவிதைகள்

61


1. கவிஞர் ஆனந்தம்

ஆனந்தம் எதுவென் றறியார் பலரே!
பலர், பல விதமாய்ப் பகர்ந்திடு கின்றனர்.
ஆனால் இவரோ ஆனந் தம்!அவர்
ஆனந் தத்தைநாம் அனுப வித்திடப்
பெருந்தமிழ்க் கவியால் “பிறவித் தலைவரை”ப்
பற்றிப் பாடுவர் பாங்கறிந் தினிதே!
சிலர்தாம் முயன்று தலைவரும் ஆவார்;
சிலரிடம் தலைமை திணிக்கப் பட்டிடும்;
அவர்பிரித் தாளுவர்; பேதுற் றஞ்சுவர்;
தொண்டும் துணிவும் துளியு மிலாரிவர்!
பெரியர் பிறவித் தலைவ ரேகொல்?
அஞ்சா நெஞ்சினர்; எஞ்சுத லின்றி
எடுத்தது முடிப்பர்; இடும்பை இயல்பென
இடுக்கண் அழியார்; எறிகோல் பாம்பென
எதிர்இடர் சீறிக் கடிந்திடும் இயல்பினர்
சீரார் தலைமை ஏற்பர் அவர்தம்
புகழ்ஆ னந்தம்; புகல்வர் ஆனந்தம்!

2. கவிஞர் முடியரசன்

முடியர சர்பலர் ஆண்டனர் முன்னாள்
பாரிடை இன்று யார்முடி யரசர்?
யாரையும் காணோம் ஒரிரு வர்தாம்
இருந்த போதும் ஒதுக்கிடம் ஏகினர்.
குடியர சோங்கிடும் யுகத்தினில் இங்கே
முடியர சென்றே மூதறி வாளர்
போற்றிட இங்கே போந்தனர் ஒருவர்
என்ன புதுமை! என்ன வியப்பு!
முடியர சாள்வது புவியுல கந்த