பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/80

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மன்பதைக்(கு) உற்ற நோயெலாம் தீர்க்க
வந்த வள்ளுவ னோ, உயிர் உடம்பில்
இருப்பதற்(கு) அறிகுறி இனியஅன் பென்றான்!
“அன்பின் வழியது உயிர்நிலை” என்ற
குறளமு துண்போம்! குறைநிறை பாராது
அன்புசெய் திடுவோம்! வேற்றுமை கடந்து
அன்புசெய் திடுவோம்! அனைவரும் வாரீர்!
விரிவன எல்லாம் வாழும்; வளரும்!
சுருங்கு வனஎலாம் அழியும்; ஆதலால்
யாண்டும் விரிந்த அன்பினைக் காட்டுக!
பாஅர் மாட்டும் அன்பினைக் காட்டுக!
அன்பினைச் செய்க! அன்பினைப் பெறுக! என
அன்புப் பொங்கல் சிறக்கவே பாடிட
வருகிறார் வண்டமிழ்க் கவிஞர்மா யழகு!
அன்பினில் விளைந்த அவர்தம் அழகுக்
கவிதையைக் கேட்போம்! கவிஞர் வருகவே.

முடிப்பு:

மாயழ குக்கவி மனங்கொள வழங்கிய
அன்பினை ஏற்போம்! அன்பைவாழ் வாக்குவோம்.

புலவர் நா. செல்லம் - அறிமுகம்
“பொங்கல் சிறக்கவே! - அறத்தினால்! ”


அன்பு ஆற்றல் மிக்கது! - அப்பரும்
“ஆற்றல் மிக்க அன்”பென மொழிந்தார்!
அன்பு, தொழிற்பா டுறுவது! அன்பு
உளதெனில் ஆங்குச் செயற்பா டுளதாம்!
செயற்பா டுளதெனில் அன்புஆங் குளதாம்!
அன்பின் விளைவே அறமாம்! அந்த
அன்பினை நுகர்தற்கு உரிய வாயிலும்