பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



காரைக் குடிநகர் மன்றத் தலைவரே!
சிதறாச் சிந்தை யுடைய சிதம்பர!
இன்று,
பரந்த இந்திய நாடு ஒருமைப்
பாட்டினுக் கே, வழி கேட்டுநிற் கிறது!
பெருமைசால் தமிழகம் அரசியற் கண்ணியம்
எதுவெனக் கேட்டு ஏங்கிநிற்கிறது!
இந்தி ஆங்கிலம் இவைநெருக் கிடவே
எந்தமிழ் அன்னை நொந்து அவட்குரிய
தமிழ கத்தினைச் சடுதியில் மீட்டு
ஆண்டிட ஒர்வழி கேட்டுநிற் கின்றாள்!
ஆம்! ஆம்! இன்று ஒருவழி தேவை!
நம்தலை முறையில் அகத்தியர் போலே
புகழ்மிகு தலைமை பொலிவுறப் பெற்று
விளங்கிய அண்ணா வின்வழி யே, வழி
கடவுளின் பெயரை எவருமே கூறி
கடவுள் யார்? அவர் நெறிஎது? என்று
அறியவொண் ணாமல் ஆக்கிய சமயக்
கணக்கர் வழியில் சிக்கிய கடவுள்போல்
இன்றுஅண் ணாவின் பெயரைஎல் லாருமே
கூறு கின்றனர்! குருடர்கள் ஐவர்
யானைகாட் டியது போல - இதுவே
அண்ணா வழியெனக் காட்டு கின்றனர்!
நமக்கோ, மயக்கம்! நாட்டுக்கும் மயக்கம்!
நீதி தேவன் மயக்கம் தெளிவித்த
அண்ணா இன்றில்லை! ஆயினும் என்ன?
அண்ணா நினைவுநம் அகத்தினில் பசுமை
யானதோர் நினைவு! இன்றும் இடருற்று
அழும்பொழு தெல்லாம் அண்ணா இல்லையே
என்னும் ஒர் ஏக்கம், இதயத் தினையே