பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/92

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இப்படிப் பலப்பல பலப்பல உண்டு!
அண்ணா கலப்புத் தமிழினை எதிர்த்தார்!
தனித்தமிழ் பேசினார்! தகவுடன் வளர்ந்தார்!
இன்று,
அந்நிய மொழியாம் ஆங்கில மொழியும்
தேசியம் என்ற பெயரால் இந்தியும்
அன்னைத் தமிழினை நெருக்க லாயின!
அண்ணா வின்குறிக் கோள்இதோ அறிக!
“அன்னை மொழி அரி யணைஏற வேண்டும்!
தமிழ்நாட் டினில்தாய்த் தமிழ்துறை தோறும்
பயிற்று மொழியாய்ப் பரவிட வேண்டும்!
எங்கும் எதிலும் தமிழே ஆண்டிட
வேண்டும்!” என்றார்! இதுநடந் தாலே
நாடு - தேசியம் நலம்பெற லாகும்!
ஆதலின் மைய அரசாள் வோரே!
மாதிரிப் பள்ளி களில்தமிழ் மொழியைப்
பயிற்று மொழியாக் கிடுவீர்! நயத்தகு
தமிழைக் காப்பீர்! தமிழின் தகுதி
உயர்ந்திட உதவுவீர்! இந்தி மொழியும்
ஆங்கில மொழியும் ஆதிக்க மொழிகளாய்
ஆதல் கூடா! ஆதல் கூடா!
என்பதுஅண் ணாவின் மொழிக்கொள்கை யாமே!
இந்தி ஆங்கிலம் இவையிரண் டினிலும்
இந்தி யால்வரும் கேட்டினைத் தவிர்க்கலாம்!
ஆங்கில மொழியோ அன்னை மொழியாம்
தமிழினுக் குரிய அரியனை அமர்ந்து
தமிழைக் கீழே இறக்கி விட்டது!
கொஞ்சும் தமிழ்ம ழலையர் கூட
டாடி மம்மி என்று பேசிடும்
காலம் வந்து விட்டதே, இங்கே!