பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/98

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அண்ணா வழியில் குடிசெயல் வகையைக்
காட்டிட வருக, மரியதாஸ் கவிஞரே!

முடிப்பு:

மாத்தமிழ்க் கவிஞர் மரியதாஸ் பாடிய
ஏற்றமார் கவிதை கேட்டுநாம் மகிழ்ந்தோம்!
அண்ணா வழியில் குடிசெயல் வகையினை
ஐயத்திற் கிடமின்றி அருமையாய்க் காட்டினார்!
வாழிய கவிஞர், வண்டமிழ் எனவே!
தமிழருக் குத்தன் மானம் உண்டு!ஆனால்
இனமானம் என்பது இம்மியும் இல்லை!
அயலினத் தால்தமிழ் இனம்அழி யாது!
ஆயினும் இங்கே ஒருகுடிப் பிறந்தோர்
பிணங்குவர்! பொருதுவர்! இணங்குதல் செய்யார்!
தமிழின அழிவு தன்னினப் பகையால்
தான்நிகழ் கின்றது! ஏன்நிகழ் கின்றது?
அயலார் ஒருவர் இடையிற் புகுந்து
நல்லோர் எனவும் தொல்லோர் சென்ற
வழக்கிது வென்றும் நயத்தகு நாகரிகம்
இதுவென மொழிந்தும் புகழ்மொழி களினால்
மயக்கியும் காற்றும் இடைப்புகு தாத
நெருக்க முடைய தமிழரைப் பிரித்து
விடுவர்இஃ துண்மை வரலா றாகும்!
அண்ணா - சம்பத் பிரிவின் போது
பின்னணி யார்? அதை உற்று நோக்குக!
கன்னித் தமிழின் காவலர் கலைஞர்
பூமண் டலம்புகழ் பொன்மனச் செம்மல்
இவரிடைப் பிரிவை உருவாக் கியது யார்?
கூர்ந்துநோக் கிடுவீர்! குடியினைக் கெடுப்போர்க்கு
இரையா காதீர்! இரையா காதீர்!