பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/148

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கூரிய "பல் குழு" இன்றைய அரசியல் கட்சிகளிடத்தில் தான் உள்ளன. மக்கள் மனம் இறுக்கத்தில் சிக்கிக் கொண்டதால் அதற்கு நேர் எதிரில் செல்கின்றன. இன்று பிரச்சினைகளை வைத்தே கட்சிகள் வளர ஆசைப்படுகின்றன; அதனால் பிரச்சினைகளைத் தேடி அலைகிறார்கள்.

மனித குலம் நல் வாழ்வு வாழ இன்னும் நெடியதூரம் செல்ல வேண்டியிருக்கிறது. நமது நாட்டில் முன்னேற்றம் என்ற திசையில்.நடந்து கொண்டிருக்கிறோம். ஆனால் நடை மிக மிக மெது. மற்ற நாடுகளை நோக்க நாம் ஒரு நூறு ஆண்டுகள் பின்னடையில் இருக்கின்றோம். இது உறுதி ஏன்? ஒரு மூலப்பொருள் கூட இல்லாத ஜப்பான் நாடு இன்று உலகச் சந்தையைப் பிடித்தாள்கிறது. அமெரிக்க நாட்டுச் சந்தைகூட இன்று ஜப்பான் வசம் இருக்கிறது. உலகப் போரில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட ஜெர்மனி இன்று திரும்ப ஆலைகளையும் தொழிற்சாலைகளையும் கட்டி, மாட மாளிகை கூடகோபுரத்துடன் விளங்குகிறது. எப்படி? எதனால்? அந்த நாடுகளின் மக்கள் வாழ்க்கையில் ஒற்றுமை இருக்கிறது. கூட்டுறவு வளர்ந்திருக்கிறது. கடின உழைப்பு இருக்கிறது. வேலை நிறுத்தங்கள் கூட உற்பத்திக்கும் வேலைக்கும் இடையூராக நடப்பதில்லை. நமது நாட்டிலோ நாட்டுப் பிரிவினைக் கிளர்ச்சிகள்! கடின உழைப்பு என்பது மருந்துக்குக்கூட இல்லை. வேலை நிறுத்தம் செய்யும் பழக்கத்தின் காரணமாக ஏதாவது காரணத்தைத் தேடி அலைந்து கொண்டிருப்பவர்கள் நம்முடைய நாட்டினர். ஆம்! இங்கு வேலை நிறுத்த நாட்களுக்கும் ஊதியம் உண்டு. நமக்கு நமது நாட்டைப் பற்றிய கவலை. சமூகத்தைப் பற்றிய நினைப்பு இல்லை. நாம் ஒரு சமுதாயமல்ல. ஒரு கூட்டம். அவ்வளவு தான். "ஒருவருக்காக எல்லாரும்" "எல்லாருக்காகவும் ஒருவர்" என்ற சித்தாந்தத்தைப் புரிந்துகொண்டு வாழத்தலைப் பட்டால் எல்லாரும் வாழலாம்; இன்புற்று வாழலாம். ஆனால், நமது நினைப்பு என்ன? "எல்லாரும் நமக்காகவே