பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/159

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2


சமயவியல் கட்டுரைகள்

'1. சமய வாழ்வு'

வாழ விரும்புகின்ற-வாழ்கின்ற மனித சமுதாயத்திற்கு மார்கழித் திங்கள் மிக முக்கியமான திங்கள். மனித குலத்தை நன்னெறியில் அழைத்துச் செல்லும் திங்கள் மார்கழித் திங்கள். பன்னிரெண்டு திங்களில் பள்ளி எழுச்சி பாடுகின்ற திங்களும் இந்தத் திங்கள் தான். இத் திங்களில் பாவை நோன்பு என்றே சொல்லுகிறோம். பாவைப் பாட்டுப் பாடுகிறோம்-பாவைப் பாடல்களைப் பாடச் சொல்லுகிறோம். பரிசுகள் வழங்குகிறோம். எனினும், பாவைப் பாடல்களைப் பாடும் எழுச்சி பெறுகவில்லை. பாவை நோன்பின் அடிப்படையை நாம் மறந்துவிட்டோம். நமது மாணிக்கவாசகப் பெருமான் சொல்லியவண்ணம் தமிழகத்துப் பெண்கள் இப் பாவை நோன்பை நோற்பார்களானால் வீட்டிலும் நாட்டிலும் ஞானச் செல்வம் பெருகும்.

சுந்தரரை ஈன்றெடுத்துக்-கொடுத்த தந்தையும் ஒரு நாயனார், தாயும் ஒரு நாயனார். சுந்தரரை ஈன்றெடுத்த இசை ஞானியார் புகழை நாவால் கூறமுடியாது என்று சேக்கிழார் பெருமானே பேசுகின்றார். இசை ஞானியார் குடும்பம் ஒரு ஞானக் குடும்பம். அவர் குடும்பம் சமயம் தழுவிய குடும்பம்.

வீடுகளில் சமய வாழ்வு இருந்தால் நாட்டில் சமயப் பண்புமிகும். சமயம் கற்றுக்கொடுக்கக்கூடியதல்ல -