பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/265

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயவியல் கட்டுரைகள்

253


ஆனால், என்னைப் பொறுத்த வரையில் வரவேற்புரை வழங்கிய நண்பர் சொன்னதைப் போல நான் யாரையும் கோபித்துக் கொள்ளத் தயாராக இல்லை. காரணம், உயிர்கள் பழக்கத்தின் வழிப்பட்டவை. அடிக்கடி இப்படிச் சொற்பொழிவுகளைக் கேட்டு பழகியிருந்தால் அவர்கட்கு இது ஆர்வமாக இருந்திருக்கும். படத்திற்குப் போகமாட்டார்கள். படம் அடிக்கடி பார்ப்பது, அது பார்த்துப் பழகினதால்; பார்க்காது போனால் என்னவோ போல ஒரு குறையாக இருக்கும். அதனால் படத்தின் மீது பற்றாகப் போவதற்கு படம் மட்டும் ஒரு காரணமல்ல. அதைப் பார்க்காது போனால் ஏதோ தூக்கம் வராதது போல ஒரு சூழல்பழக்கத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறது.

உதாரணம் ஒன்று சொன்னால் விளங்கும். நல்ல வேப்ப மரத்திலே புழுக்கள் வளருகின்றன. அவை வேப்பங் கொழுந்துகளைத் தின்று வளரும். நமக்குத் தெரியும் வேப்பங் கொழுந்து எப்படியிருக்கும் என்று! கசக்கும், அந்த வேப்பங்கொழுந்துகளைத் தின்றுதான் அந்தப் புழுக்கள் வளருகின்றன. அந்தப் புழுக்களைப் பிடித்து, நல்ல இனிக்கின்ற கரும்பிலே கொண்டு போய்விட்டால், அந்தக் கரும்பு அந்தப் புழுக்களுக்கு பிடிக்காது; இனிக்காது. மிகவும் தொல்லையாக இருக்கும் காரணம்; அதற்குக் கசப்பைப் பழகிப் போனதின் காரணமாகக் கரும்பு கசக்கிறது; வேம்பு இனிக்கிறது என்று சொல்லுவார்கள். இந்த உயிர்கள் பழக்கத்தின் வழிப்பட்டவை இதை "உழுத சால்வழியே உழுதல்” என்பார்கள்.

சில மாடுகள் தானாகப் போகும். ஓர் இடத்திற்குத் தானாகத் திரும்ப வந்துவிடும். அதற்கு யாரும் வந்து 'பிரேக்' போட வேண்டாம். அது தானாக சாலையிலே மேலே போகும். சந்தைப் பேட்டைக்கு வண்டியைக் கட்டி வைத்து விட்டால் வண்டிக்காரர், தூங்கிவிடுவார். வண்டியோடு மாடுகள் போய் நின்றுவிடும். அதற்குக் காரணம், அது