பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/280

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

268

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



திருக்கடவூர் என்ற ஊரிலே ஒருவர் இருந்தார். அவர் மிகவும் அன்பாக இருப்பவர். கடவுளிடத்திலும் மிகவும் அன்பாக இருப்பவர். அவருக்கு அந்தச் செய்தி கிடைத்தவுடன் நாம் போய்ப் பார்ப்போம் என வந்தார். அவர் இந்த யானை, குதிரை எல்லாவற்றையும் அவிழ்க்கச் சொல்லி விட்டு, சங்கிலியெல்லாம் கழட்டச் சொன்னார். இரண்டு அல்லது மூன்று முழத்திலே தென்னை நாறினால் ஆன கயிறு எடுத்து, தனக்கும் அந்த சுவாமிக்குமாக முதுகிலே போட்டுக் கட்டி, அவர் மூச்சுப் பிடித்து இழுக்க முயன்றார். உடனே, சிவபெருமான் நினைத்தார் "ஐயோ! இந்தக் கயிறு முரட்டுக் கயிறாக இருக்கிறதே. இந்தக் கயிறு போட்டு இவன் இழுக்கிறானே, இவன் முதுகெலும்பிலும், முதுகிலும் உறுத்தி வலிக்குமே” என நினைத்தார். உடனே நிமிர்ந்தார். இறைவன் எதனால் குனிந்தார்? அன்பினால் குனிந்தார். அப்படியென்றால், திரும்பவும் நிமிர வேண்டுமென்றால் அன்பினால் தான் நிமிர வேண்டும். கடவுள் அன்பாக இருப்பார் என்பதற்கு ஒரு உதாரணம் சொன்னேன். பணபலம், படை, குதிரை, யானை நிமிர்த்த முடியாத ஒன்றை ஒரு குங்கிலியக் கலையனாருடைய முதுகிலே கயிறு போட்டவுடன் அது நிமிர்கிறது என்றால், குங்கிலியக் கலையனாருடைய முதுகிலே கயிறு உறுத்துமே என்பதற்காக நிமிர்ந்தார். எனவே, பிரச்சனை என்றால் கடவுளிடம் விட்டுவிட வேண்டும்.

இப்பொழுது பாஞ்சாலியை எடுத்துக் கொள்ளுங்கள். துரியோதனன் அவையில் கொண்டு வந்து துகில் உரிகிறார்கள். அவன் துகில் உரிந்து கொண்டே வருகிறான்; புடவை குறைந்து கொண்டே இருக்கிறது. இவள் கத்திக் கொண்டே இருக்கிறாள். புடவையை நன்றாக இருக்கி தன் இடுப்பில் கட்டிப் பிடித்துக் கொண்டே கத்துகிறான், "கண்ணா, கண்ணா" என்று கத்துகிறாள். கடவுள் பார்த்தார். இனியும் அவளுக்கு நம்பிக்கை இருக்கிறது. தன்னால்