பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/284

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

272

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வேண்டுமென்பதில்லை. மற்ற ஒப்பனையெல்லாம் மனிதனுடைய மகிழ்வுக்குத் தானே தவிர வேறொன்றுமில்லை.

நீங்கள் முத்து மாரியம்மனை வணங்குகிறீர்கள். காலையில் நான் முத்து மாரியம்மன் என்ற பெயரைப் பார்த்தவுடன், பாரதியின் முத்து மாரியம்மன் பாடல் ஒன்றை நினைத்துப் பார்த்தேன். பாரதி எப்படி நம்முடைய வாழ்க்கையிலே நிகழ வேண்டும் என்று கற்பனை செய்து காட்டுகிறான். நாள்தோறும் நாம் கவலையிலே இணைந்து, அழிந்து பாவியாக வாழ்கிறோம். நாள் முழுவதும் கவலைப்படுவது என்பது வாழ்க்கைக்கு மிகவும் பிடிக்காத ஒரு செயல். மரத்தைக் கரையான் பிடித்தால், எப்படி அழிந்து போகிறதோ, அதே போல, மனிதனைக் கவலை பிடித்தால் அழிந்து போகும். கவலையினால், ஆகக் கூடிய காரியம் ஒன்றுமே கிடையாது. வருவன வரும், வராமல் போகப் போவதில்லை.

"பரியினும் ஆகாவாம் பால்அல்ல உய்த்துச்
சொறியினும் போகா தம"- (குறள் - 376)

என்றார் திருவள்ளுவர். நீ ஒன்றைக் கட்டிப்பிடித்துக் காப்பாற்றினாலும் உனக்கு உரியது அல்லாத்து போகத்தான் போகிறது. நீ வரவேண்டாம். வரவேண்டாம் என்று விரைந்து கதவைச் சாத்தினாலும் வருவது வந்தே சேரும். எனவே, நாளை என்ன நிகழப் போகிறது என்பதைப் பற்றி அலட்டிக் கொள்ளாதே நிகழ் காலத்தை உறுதியாக நம்பு, அதில் பிடிவாதமாக இரு சிறப்பாக வாழு. நேற்று நடந்தது நடந்து விட்டது. நாளை வரப்போவதும் வரத்தான் போகிறது. நாம் ஏன் கவலைப் படுவானேன்.

இந்த ஜோசியக்காரன், ராசிபலன் எல்லாம் நம்முடைய சமூகத்தை பலவீனப்படுத்துவன. நம்முடைய சமூகம் என்றைக்கு ராசிபலன் எல்லாம் படிக்காமல் தப்பித்துக் கொள்கிறதோ, அன்றைக்கு நீங்கள் நிச்சயமாக