பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/337

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

325


எழுகின்ற ஞாயிறென பாரத சமுதாயத்தில் அண்ணல் காந்தியடிகள் தோன்றினார். அடிமைகளாக வாழ்ந்த நமக்குச் சுதந்திரம் வாங்கித் தந்தார். இல்லை-சுதந்திரமாக வாழவும் கற்றுக் கொடுத்தார். இந்நாடு சுதந்திரம் பெற்றது. நாமிருக்கும் நாடு நமதாயிற்று. நமக்காக நாமே ஆட்சி செய்யும் குடியாட்சியும் மலர்ந்தது. ஆயிரமாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து புகழ்பெற்ற சுதந்திர பாரதநாட்டின் குடிமக்களாக நாம் வாழ்வது முன்னைத் தவத்தின் விளைவே.

நாடு சுதந்திரம் பெற்றுவிட்டது. ஆனால், அந்நிய விளைவுகளை-அவற்றின் அடிச்சுவடுகளை அழித்துமாற்றியமைத்துப் புதிய சமுதாயத்தை அமைக்கும் பெருங்கடமை நம் முன்னே நிற்கிறது. பிறர் வாழ்வதற் கென்றே நாம் பிரித்து வைக்கப் பெற்றோம். ஒளிவிளக்கில் விழும் விட்டில் பூச்சிகளைப்போல, நம்மையே அழித் தொழிக்கக்கூடிய சாதி, இன, மத வேற்றுமைகளை ஏதோ புனிதமானவை யெனக் கருதிப் போற்றி வளர்த்து வந்திருக்கிறோம். சுதந்திர பாரத சமுதாயம் ஒரு குடும்பம். அக் குடும்பத்தில் பலமொழி பேசுவோர் உண்டு-பல்வேறு நாகரிக முடையோர் உண்டு. எனினும், வேற்றுமைகளைக் கடந்து- மறந்து விழுமிய ஒருமைப்பாடு கண்டுவாழும் ஒரு குடும்பமேயாம். இதற்கு மாறான உணர்வுகள் நாட்டிற்கும் நல்லதல்ல- நமக்கும் நல்லதல்ல.

உலகப் பெரும்போரின்போது சர்ச்சில் 'வெற்றி! வெற்றி!' என்ற குரல் வழியே அந்நாட்டு மக்களை எழுச்சியும் புத்துணர்வும் பெறச் செய்து வெற்றி பெற்றான். இன்று நம்முடைய நாட்டிற்குத் தேவைப்படுகின்ற இன்றியமையா உணர்வும், 'ஒன்றே குலம்-வளர்க ஒருமைப்பாடு' என்பனவே யாகும். வீட்டிலும் வீதியிலும் நாம் அன்றாட வாழ்க்கையில் கொண்டொழுகும் "ஒருமைப்பாட்டுணர்வே" தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்க உதவும். ஊராட்சி மன்றங்களில் பொறுப்பேற்றிருக்கும் நண்பர்கள் தங்களுடைய கிராமச்