பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/388

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

376

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மெனக் கருதியதன்றோ அவனுடைய அருளுண்மை. பற்றிப் படரும் கொம்பின்றிக் குழைந்து வாடிய கொடி முல்லைக்கு நீள்மணித் தேரை நிறுத்தியது அவனுடைய பண்பு ஆம். மறக்க முடியாததொரு மாண்புடைச் செய்தி. இறந்து வந்த பாணர்களுக்கும் புலவர்களுக்கும் முந்நூறு ஊர்களையும் கொடுத்துவிட்டான். தனக்கென ஒன்றேனும் இல்லாத நிலையில் ஈத்து இன்பம் துய்த்தான்.

வாழ்க்கையில் தமிழர்கள் கையாண்ட ஒழுக்க நெறிகளும் பண்பு நெறிகளும் பலப்பல. அவற்றுள் தலையாயதொன்றாம் ஈகைப் பண்பையே ஈண்டுச் சந்தித்தோம். தமிழரோடு தமிழ்ப் பண்பாடும் வளரவேண்டும். பண்டைத் தமிழரின் வாழ்வு முறையில் தமிழர்கள் வாழ முயல வேண்டும். தமிழர்கள் சிந்தனையில் - செல்வத்தில் திளைத்து, தமிழ் வளர்த்து, அறம் பல புரிந்து, இன்பம் பொருந்தி வாழத் துணை செய்வதே இலக்கியங்கள். அத்துணையே நாளும் நமக்குக் காட்டிக் கொடுக்கும் தனித் தமிழ்த்தாள்கள் பல தோன்ற வேண்டும். வாழ்க தமிழ்! வளர்க தமிழ்நாடு!! ஓங்குக நல்லறம்!!!

18. காந்தியடிகள்

ஐரோப்பிய நாடுகளின் சித்தாந்தங்களையும் மனித இன வரலாற்றையும்விட பாரதத்தின் சித்தாந்தங்களும் மனித இனவரலாறும் மிகப் பழமையுடன் சிக்கல்களுக்கு மேலெழுந்தவாரியாகத் தீர்வு காண்கின்ற சில நாடுகள் உண்டு. நமது நாட்டு மேதைகள் சிக்கல்களை நன்கு ஆழ்ந்து சிந்தித்து அவை தீர்வதற்குரிய வகையில் இறுதி முடிவு கண்டிருக்கிறார்கள். அத்தகு மேதைகளில் சிறந்து விளங்குபவர் அண்ணல் காந்தி அடிகள்.

பிரெஞ்சுப் புரட்சியும் ரஷ்யப் புரட்சியும் கிழக்கு இராமநாதபுரத்தில் - பங்குனி மாதத்தில் - நடுப்பகல்