பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/404

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

392

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


போர் பெரும்பகுதியினர். "பசித்தவனுக்கு ரொட்டிதான் கடவுள்” என்றொரு முதுமொழி உண்டு. ஆழ்வார் பெரு மகனும் "தின்கின்ற சோறும் பருகுகின்ற நீரும் வெற்றிலையும் பாக்கும் நீ" எனக் கடவுளைக் கண்டு காட்டுகின்றார். எனவே மக்கள் சமுதாயத்திற்கு இன்பம் அன்றாடத் தேவையின் நிறைவில்தான் இருக்கிறது.

இன்றைய நிலை

வளம்பல படைத்த நாட்டில் வறுமை தலைவிரித்தாடுகின்றது. இன்பம் பூத்துக்குலுங்கிய நாட்டில் துன்பச் சூறாவளி சுழன்றடிக்கின்றது. தாராளம் வாழ்ந்த நாட்டில் தரித்திரம் தாண்டவமாடுகிறது. வாழ்வில் வறுமையோடு போராடும் கொடிய பாதகமான சூழ்நிலை - பசி பசி என்ற ஈனக்குரல் எங்கும் கேட்கப்படுகிறது. உயர்ந்த அடுக்கு மாளிகையில் சிலர் வாழ்வு, அம்மாளிகையின் முகப்பில் சாக்கடை அருகில் நாயொடு பொருதும் பலர் வாழ்வு. இதனால் எங்கும் பொறாமைக் கனலும் மனப் புழுக்கமும் வளர்கின்றன. இதனின்றும் களவும் கொலையும் பெருகுகின்றன. நல்லது தீயது என்பது பற்றிய சிந்தனையே மக்களிடம் குறைந்து வருகிறது. போலீஸ் கூடங்களும், நீதி மன்றங்களும் பெருகிவருகின்றன.

வாழ்க்கையில் சமயம்

ஒழுக்கம் சமய வாழ்வின் அடிப்படை, நீதியும், நேர்மையும், வாய்மையும் சமய வாழ்வின் அணிகலன்கள் இவற்றை வளர்ப்பதற்கும், உறுதிப்படுத்துவதற்கும், இறவாத இன்பம் பெறுவதற்கும், வழிபாடு வழிகோலுகிறது. ஆனால் இன்றைய சமுதாயம் வாழ்க்கையின் தேவைக்கே போராடிக்கொண்டிருக்கும் பொழுது நல்லறப் பண்புகளைப் பற்றிச் சிந்திக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இம்மையை மறந்து மறுமையைப் பற்றிச் சிந்திக்கும் பேருள்ளம்