பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/452

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

440

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வளர்ப்பு ஒரு தனித்தொழில் அல்ல; பன்முனையில் பயன்தரும் தொழிலாகும். கால்நடை வளர்ப்பு சிறப்புடன் நடைபெற்றால் விளைபுலன்களுக்கும் இயற்கை உரம் கிடைக்கும்; வேளாண்மை மகசூலும் நன்றாக இருக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல தரமான பால் - பாலுணவு முதலியன கிடைக்கும். இன்று தமிழ்நாட்டில் 17% பேருக்குத்தான் கொழுப்புச் சத்துள்ள உணவு கிடைக்கிறது என்பது கவலையுடன் கவனிக்கத்தக்கது. கால்நடை வளர்ப்புக்காக பால்மாடு, ஆடுகள் வளர்ப்புக்காக வறுமை கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களுக்கு இந்திய அரசும் மாநில அரசும் ஊரக ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் பலகோடி ரூபாய்களை வழங்குகின்றன. ஆனால், இந்தத் திட்டத்தால் போதிய பயன் விளையவில்லை. இந்தக் குறையை நிறைவுசெய்ய தமிழ்நாட்டில் தனியார் துறையிலோ, கூட்டுத் துறையிலோ பங்களிப்பு முறையில் தரமான கால்நடைப் பண்ணைகள் அமைத்து நல்ல தரமான பால் மாடுகளை வளர்த்து வழங்கலாம். அமெரிக்கா போன்ற நாடுகளில் 20 முதல் 50 லிட்டர் வரை ஒரு மாடு பால் தருகிறது. ஆனால் தமிழ்நாட்டிலோ பெரும்பாலான மாடுகள் 2 முதல் 5 லிட்டர் தான் தருகின்றன. 8 முதல் 18 லிட்டர் வரை கறக்கும் மாடுகளும் உண்டு. ஆனால், எண்ணிக்கையில் மிகக் குறைந்தவை. ஆனால், தமிழ்நாட்டிற்குத் தரமான கால்நடைப் பண்ணைகள் அமைக்கும் திட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்பது நமது கருத்து. கருத்து மட்டுமல்ல வேண்டுகோளும் கூட.

தமிழ்நாட்டில் இன்று இளைஞர்கள் திசைதெரியாமல் திகைத்து நிற்கின்றனர். இதற்குப் பெரிதும் காரணம் வேலையில்லாதத் திண்டாட்டமே. தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பு நிலவரம் இதோ: